மட்டக்களப்பு, நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை ஆலய நேர்ந்தளிப்பு பெருவிழா
Diocese of Batticaloa 18 Dec 2014
மட்டக்களப்பிலிருந்து
தமிழ்கத்தோலிக்கசெய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் திருத்தலங் களில் ஒன்றான நாவற்குடா, தூய சின்ன லூர்து அன்னை ஆலயத்தினை புதிதாக அமைக்கும் பொருட்டு 11.02.2014 அன்று அடிக்கல் நடப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இறைமக்களினதும், பங்குத்தந்தையினதும் அயரா முயற்சியினால் இவ்வாலயம் பூர்த்தியடைந்து 16.12.2014 அன்று மறைமாநில ஆயர் பேரருட் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களால் அபிசேகம் செய்யப்பட்டு திரைநீக்கம் செய்து திறந்துவைக்கப்பட்டது.
புதிய ஆலய நேர்ந்தளிப்பு பெருவிழாவில் மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள், இறைமக்கள் அனேகமானோர் கலந்துகொண்டனர். திறப்புவிழா அபிசேக திரு ப்பலியினை மேதகு ஆயர் தலைமையில்; பங்குத்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன், மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை. எப்.எக்ஸ்.டயஸ் ஆகி யோர் இணைந்து கூட்டுத் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் ஆலய கட்டிடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 309 நாட்களில் பூரணப்படுத்த பணிபுரிந்த பணியாளர்கள், உடனுழைப்பாளிகள், தாராளமான வகையில் பண, பொருளுதவி நல்கிய நல் உள்ளங்கள் கௌரவிக்கப்பட்டனர். ஆலயத்துடன் இணைந்ததாக அமைக்கப்பட்ட நற்கருணை சிற்றாலயமும் ஆயர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
அதேவேளை இரவு பகல் எனப்பாராது பங்கு மக்களுடன் இணைந்து பாரிய பொறுப்பை குறுகிய காலத்திற்குள் செவ்வனே நிறைவுசெய்த பங்குத் தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளாரை பங்குச்சமூகம் நினைவுக் கேடயத்தினை வழங்கி கௌரவித்தது.
மாவட்ட மட்டத்தில் ஐந்தாவது தடவையாகவும் முதலாவது இடத்தினைப் பெற்ற ஓசானம் நிலையம்
Diocese of Batticaloa 09 Dec 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்கசெய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
Diocese of Batticaloa 09 Dec 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்கசெய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
மாவட்ட மட்டத்தில் ஐந்தாவது தடவையாகவும் முதலாவது இடத்தினைப் பெற்ற ஓசானம் நிலையம்
மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சன்ட் டி பவுல் சபையின் அனுசரணையுடன் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் பராமரிக்க ப்பட்டுவரும் சத்துருக்கொண்டான் விசேட தேவைகளுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான ஓசானம் நிலையமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் சிறுவர் நலன்புரி நிலையங்களுக்கிடையிலான தெரிவில் 2014ம் ஆண்டுக்கான தெரிவிலும் முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளது.
இத்தெரிவானது கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; மேற்கொள்ள ப்பட்டிருந்தது. இதற்கான பரிசான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் ஆகியன 08.12.2014 அன்று மட்டக்களப்பு, கோட்டைமுனை, செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சர்வதேச வலது குறைந்தோர் தினத்தினைச் சிறப்பிக்கும்; விழாவில் வழங்கப்பட்டது. வருடாவருடம் ஒழுங்கு செய்யப்பட்டுவரும் இந்நிகழ்வில் 2010ம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை ஓசானம் நிலையமே முதலாவது இடத்தினைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

70வது ஆண்டு நிறைவில் தாண்டவன்வெளி, தூய வின்சன்ட் டி போல் சபை
Diocese of Batticaloa 01 Dec 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை ஆலயத்தில்; செயற்பட்டுவரும் தூய வின்சன்ட் டி போல் சபையானது ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுசெய்தமையை முன்னிட்டு 23.11.2014 அன்று மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை.அதிவந்.கலாநிதி யோசப் பொன் னையா ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை. ஜே.எஸ்.மொறாயஸ், கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை.ஜி.அம்புறோஸ் ஆகியோ ருடன் பங்குத் தந்தை அருட்தந்தை கிளமென்ட் வீ அன்னதாஸ் அடிகளாரும் இணைந்து சிறப்பு நன்றித் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி நிறைவில் ஆயர் அவர்களுடன் அனைவரும் இணைந்து கேக் வெட்டி மகிழ்வினைக் கொண்டாடினர்.
தொடர்ந்து, சபையில் இணைந்து 31 வருடமாக பணியாற்றியதுடன் அதிகூடிய காலப்பகுதியில் (சுமார் 21வருடங்கள்) பொருளாளராக செயற்பட்ட அங்கத்தவர் திரு.மாட்டின் சில்வெஸ்டர் அவர்கள் ஆயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 1943ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சபையானது மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது சபையாகும்.
வரலாற்றுப் பின்னணிகள், சபையின் வளர்ச்சியில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள், சபையினால் மேற்கொள்ளப்பட்ட நினைவுகூரத்தக்க பணிகள், தொடர் பணிகள், சபையின் ஸ்தாபகரதும், பாதுகாவலரதும் வாழ்க்கை வரலாறு போன்ற விடயங்கள் அடங்கிய ஆவண நூலாக அமைந்த “பகிர்வில்….” எனும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மலரைப்பற்றிய அறிமுகவுரையினை திருமதி.பாரதி கென்னடி அவர்கள் வழங்கினார். முதற் பிரதியினை பங்குத்தந்தை அவர்கள் ஆயர் அவர்களுக்கும், ஏனைய பிரதிகள் ஆயர் அவர்களால் அருட்தந்தையர்களுக்கும், திருக்குடும்ப, திருச்சிலுவை, ஏழைகளின் சிறிய சகோதரிகள் மற்றும் பக்திச்சபைகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு வழங்கிவைத்தார்.
தொடர்ந்து பேசிய ஆயர் அவர்கள் தாமும் குருமட வாழ்க்கையின்போது தூய வின்சன்ட் டி போல் சபையில் இணைந்து செயற்பட்டதை நினைவுகூர்ந்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இறுதி நிகழ்வாக இடம்பெற்ற ஒன்றுகூடலில் முன்னாள் அங்கத்தவர்களும், சபையிடமிருந்து உதவிபெறும் அங்கத்தவர்களும் இணைந்து சிறப்பித்தனர்.

“2015 – தூய வாழ்வின் ஆண்டு”
மறைமாவட்ட மேய்ப்புப்பணிச்சபை மகாநாட்டில்; ஆயர் அறிவிப்பு
மட்டக்களப்பு மறைமாவட்ட மேய்ப்புப்பணிச்ச பையின் மூன்றாவது வருடாந்த பொது அமர்வும் மகாநாடும் 07.11.2014 காலை மன்ரேசா தியான இல்லத்தில் மறைமாவட்ட ஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட கொடி எற்றலுடனும், மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடனும் ஆரம்பமானது.
பொது நிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை. எஸ்.டக்ளஸ் ஜேம்ஸ் அனைவ ரையும் வரவேற்றார்தொடர்ந்து தலைமையுரை யாற்றிய மேதகு ஆயர் அவர்கள் இவ்வருடம் எமது மறைமாவட்டம், மனித உரிமைகள் ஆண்டினை சிறப்பாக பல செயற்திட்டங்கள்மூலம் சிறப்பித்த மைக்கு அனைத்து தரப்பினருக்கும் தமது மனமார்ந்த பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து திருத்தந்தை அவர்கள் அறிவித்த மைக்கேற்ப ஏனைய மறைமாவட்டங்களுடன் இணைந்து 2015ம் ஆண்டினை “தூய வாழ்வின் ஆண்டாக” பிரகடப்படுத்தினார். மறைமாவ ட்டத்தின் எதிர்நோக்கானது ஆன்;மீக எழுச்சி மூலம் முழுமையாக மறுமலர்ச்சி , அன்பியங்களை மேம்படுத்துவதன்மூலம் ஆன்;மீக எழுச்சியைக் கொண்டுவரவேண்டுமெனவும் தெரிவித்ததுடன். தேவ அழைத்தலும் தேவை அதேவேளை மறைபரப்பு மறைக்கல்வி அவசியமெனவும், திருத்தந்தையின் எதிர்பார்ப் புக்கிணங்க பெற்றுக் கொண்ட நற்செய்தி மூலம் குடும்பங்கள் மாண்புற வளர்ச்சியடைய வேண்டுமெனவும் இதனை எதிர்காலத்தில் உணர்ந்து செயற்படவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பரிசுத்த திருத்தந்தை பிரான்சீஸ் அவர்களின் நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற
அறிவிப்புப்பணி குறித்து எழுதியுள்ள அப்போஸ்த லிக்க அறிவுரை ஏட்டிலிருந்து “தூய வாழ்வு- நற்செய்தி அறிவிப்புக்கான அர்ப்பணம்” என்ற தலைப்பில் அருட்தந்தை ஜோயல் சே.ச அடிகளார் உரை வழங்கினார். உரையிலிருந்து குழு ஆய்வு செய்யப்பட்டு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளுடன் மறைமாவட்ட மேய்ப்புப்பணிச் சபையின் வருடாந்த பொது அமர்வும் இடம் பெற்றது.
இவ்வமர்வில் உறுப்புரிமைபெற்ற அனைத்து அருட்தந்தையர்கள், அருட்சகோதர சகோதரிகள், பக்திச்சபைகளின் பிரதிநிதிகள், பொது நிலையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூய வின்சன்ட் டி பவுல் நினைவுதின
வினா விடைப்போட்டி - 2014
மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சன்ட் டி பவுல் சபையினர் தமது சபையின் பாதுகாலரான தூய வின்சன்ட் டி போல் நினைவு தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் பிராந்திய எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்திவரும் வினா விடைப்போட்டியானது 06.11.2014 அன்று தாண்டவன்வெளி, பேர்டினன்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் இவ்வருடம் 09 பாடசாலைகள் பங்குபற்றின. நடைபெற்ற போட்டிகளில் ஆண்டு 9,10,11 பிரிவில் முதலாவது இடத்தினை மட்ஃபுனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையும், இரண்டாவது இடத்தினை மட்ஃஜோசப்வாஸ் வித்தியாலயமும், மூன்றாவது இடத்தினை மட்ஃ இந்துக்கல்லூரி யும் பெற்றுக்கொண்டது. ஆண்டு 12,13 பிரிவில் மட்ஃபுனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை, மட்ஃ புனித மிக்கேல் தேசிய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளும் 1வது இடத்தினைப் பெற்றன.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்க ளுக்கும், வெற்றியீட்டிய மாணவர்க ளுக்கும்; சபையானது தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்வதுடன் இவர்க ளுக்கான பரிசுகள் நடைபெறவுள்ள ஒளிவிழா நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்க ளுக்கும், வெற்றியீட்டிய மாணவர்க ளுக்கும்; சபையானது தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்வதுடன் இவர்க ளுக்கான பரிசுகள் நடைபெறவுள்ள ஒளிவிழா நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன.
Diocese of Batticaloa 01 Dec 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் 18.10.2014 அன்று மாலை அருட்தந்தை.போல் றொபின்சன் அடிகளாரால் நீண்ட கால இடைவெளிக்குப்பின் இறைவார்த்தைப் பகிர்வுடன்;, குணமளிக்கும் திருப்பலியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் கலந்து தமது ஆசீPரை வழங்கினார். தொடர்ந்து அருட்தந்தை.போல் றொபின்சன் அடிகளாரால் இறைவார்த்தைப் பகிர்வுடன் கூடிய குணமளிக்கும் வழிபாடும், நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாண்டவன்வெளி திருச்சபை இறைமக்களுடன் ஏனைய பணித்தளங்களிலிருந்து அநேக இறைமக்கள் செபம் வெற்றிதரும் எனும் நம்பிக்கையுடன் பக்தியுடன் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் அருட்தந்தை.போல் றொபின்சன் அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை அருட்தந்தை.சீ.வி.அன்னதாஸ் அடிகளாரும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வானது நள்ளிரவுடன் நிறைவுபெற்றது.
தாண்டவன்வெளி, குழந்தை இயேசு சிற்றாலயத் திருவிழா
Diocese of Batticaloa
17 Oct 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
தாண்டவன்வெளி. தூய காணிக்கை அன்னை தேவாலய பங்கின்கீழ் அமைந்துள்ள குழந்தை இயேசு சிற்றாலயத் திருவிழாவானது அக்டோபர் 10ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி திருநாள் திருப்பலியுடன் நிறைவு பெற்றது.
ஆரம்பத்தில் அருட்தந்தையர்கள் மேள தாள வாத்தியங் களுடன் இறைமக்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து அருட்தந்தை.எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளார் தலைமையில் அருட்தந்தை.ஜீவன் (இயேசு சபை), பங்குத்தந்தை. சீ.வி.அன்னதாஸ் ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலி யினை நிறைவேற்றினர்.
இத்திருப்பலியில் தாண்டவன்வெளி இறைமக்களுடன், ஏனைய பங்குகளிலிருந்தும் அநேக இறைமக்கள் கலந்து சிறப்பித்தனர். திருப்பலி நிறைவில் குழந்தை இயேசுவின் ஆசீருடன், வருகை தந்தோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்ட மனித உரிமை ஆண்டு நிறைவு விழா – 2014
Diocese of Batticaloa 09 Oct 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
கடந்த வருடம் நடைபெற்ற மேய்ப்புப்பணிச்சபை மகாநாட்டின்போது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் 2014ம் ஆண்டினை மனித உரிமைகள் ஆண்டாக பிரகடனப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இவ்வருடம் முழுவதும் இதனை மையக்கருத்தாகக்கொண்டு ஆலய திருவிழாக்களில் மறையுரைகள் மூலமாகவும், மற்றும் ஆணைக்குழுக்கள், பக்திச் சபைகள் போன்றவை பல நிகழ்வுகளையும் முன்னெடுத்துச்சென்றன.
மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மறைக்கல்வி நடுநிலையம், சமூகத்தொடர்பு ஆணைக்குழு, பொதுநிலையினர் ஆணைக்கு ழு போன்றவை மாணவர்கள், பொது நிலையினருக்கான கருத்தரங்குகள், கட்டுரை, பேச்சு, கவிதை, குறுந்திரைப்பட போட்டிகளை மறைக்கோட்ட ரீதியாக நடாத்தியது.
இறுதியாக மனித உரிமை ஆண்டு நிறைவு விழாவினைச் சிறப்பிக்கும்பொருட்டு அக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை.எப்.எக்ஸ்.டயஸ் அடிகளார், மறைக்கோட்ட முதல்வர் அருட்தநதை.ஜே.எஸ்.மொறாயஸ் மற்றும் மறைமாவட்ட குருக்களுடன் இணைந்து புளியந்தீவு, தூய மரியாள் பேராலயத்தில் நன்றி கூட்டுத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவுபெற்றதும் பேராலயத்திலிருந்து பான்ட் வாத்திய இசையுடன் விழா மண்டபம் நோக்கி ஊர்வலமாக ஆயருடன் இணைந்து அருட்தந்தையர்கள், அருட்சகோதர சகோதரிகள், இறைமக்கள் அனைவரும்; பவனியாகச் சென்றனர். விழா மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் ஆயர் அவர்களது தலைமையில் விழா நிகழ்வுகள்; ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உயர்திரு. ஏ.ஜி. அலெக்ஸ்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஆயர் அவர்கள் தமது தலைமையுரையில் மனித உரிமைகள் ஆண்டு தொடர்பாக அனைவரும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றது மனநிறைவைத் தருவதாகவும், இது இவ்வருடத்துடன் நிறைவுபெறும் ஒன்றல்ல தொடரவே ண்டுமெனவும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டு மெனவும் குறிப்பிட்டார். மனித சாயலாகப்படைக்கப்பட்ட இறைமகன் இயேசு, மனித உரிமைகளுக்காகவே போராடியவர். இன்று கருக்கலைப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறை, இளைஞர்கள் போதை வஸ்துக்கு அடிமையாதல் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்துகொண்;டேயிருக்கின்றன. இவையனைத்தும் மனித உரிமை மீறலுடன் தொடர்பு பட்டவை. இறைவன் மனிதனை வேறுபாடின்றி சமத்துவமாக வாழவே படைத்தான். அதற்கேற்றவாறு ஒவ்வொருவரும் வாழ முயற்சிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கை, கரித்தாஸ் திட்டமிடல் முகாமையாளர் திரு.கே.தெய்வேந்திரராஜா அவர்கள் சிறப்புரை வழங்கினார். அதேவேளை மனித உரிமைகள் ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வைரவிழா நிறைவில்
ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை ஆலய திருத்தலம்
Diocese of Batticaloa 08 Sept 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினரஜா
வைரவிழா நிறைவில் ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை ஆலய திருத்தலம்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரைத்தலமான ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை ஆலய வைரவிழா நன்றித் திருப்பலியினை 07.09.2014 அன்று கொழும்பு, உயர் மறைமாவட்ட துணை ஆயர் அதிவந்தனைக்குரிய இம்மானுவல் பர்னாந்து ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுடன் அருட்தந்தையர்களும்; இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருப்பலியில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான இறைமக்கள் கலந்துகொண்டிருந்தனர். திருப்பலி நிறைவில் அன்னையின் ஆசீருடன், கொடியிறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
திருவிழாவிற்கு முந்திய நாளான 06.09.2014 அன்று மட்டக்களப்பு தூய மரியாள் பேராலயத்திலிருந்து வவுணதீவு ஊடாக பக்தர்கள் பாதயாத்திரையாக தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கிப்பயணித்தனர். இத்திரு யாத்திரையினை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் ஆரம்;பித்து வைத்ததுடன், முழுமையாக பங்கெடு த்தும் கொண்டார். இத்திருயாத்திரையில் ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் தூய சதாசகாய அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயம் இதுவாகும். 1954ம் ஆண்டு உலக மரியன்னை ஆண்டில் அருட்தந்தை.ஜோர்ஜ் வம்பேக் அடிகளார் ஓர் ஓலைக்குடிலை அமைத்து அதில் தூய சதா சகாய அன்னையின் படமொன்றினை வைத்து ஆரம்பித்தார்.
அக்காலப்பகுதியில் மறைமாவட்ட ஆயராகப்பணியாற்றிய அதிவந்தனைக்குரிய இக்னேசியஸ் கிளெனி ஆண்டகை அவர்களே முதலாவது திருநாள் திருப்பலியினை நிறைவேற்றினார். 1980 இற்கு முன்னர் இவ்வாலயத்திற்கு இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் வந்துசெல்லும் வழக்கம் இருந்தது. இதனால் வழிபாடுகள் யாவும் தமிழிலும், சிங்களத்திலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியிலே இது தேசிய யாத்திரைத் திருத்தலமாக அரசினால் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை வெளியிடங்களிலிருந்து வருகை தந்த பக்தர்கள் ஆலய வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பையும் வழங்கி வந்துள்ளனர்.
அறுபது ஆண்டுகளை நிறைவுசெய்யும் திருத்தலத்தின் வைர விழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு வசதிகளுடன் கூடிய சகல ஏற்பாடுகளையும் முன்கூட்டியே திருத்தல பரிபாலகர் அருட்தந்தை.டக்ளஸ் ஜேம்ஸ் அடிகளார் மேற்கொண்டிருந்தார்.

முப்பெரும் விழாவில் செங்கலடி பங்குத்திருச்சபை
Diocese of Batticaloa 19 Aug 2014
மட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகத்தின்கீழ் அமைந்துள்ள செங்கலடி, தூய நிக்கொலஸ் தேவாலய திருச்சபையானது, தேவாலயம் ஆரம்பிக்கப்பட்ட 87வது ஆண்டினையும் (1927-2014), தேவாலயம் கட்டியதன் 50வது ஆண்டினையும் (1963-2014), தனிப்பங்காக உருவானதன் 30ம் ஆண்டினையும் (1984-2014) 17.08.2014 அன்று சிறப்பித்தது. அன்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி.ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் முப்பெரும் விழாவுடன் கூடிய திருவிழா சிறப்பு நன்றி கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.
ஆயர் அவர்களுடன் பங்குத்தந்தை. ஜி.மகிமைதாஸ் (சொமஸ்கன் சபை), சொமஸ்கன் சபையின் மாநில தலைவர் அருட்தந்தை. ஜோசப் தம்பி, மேலாளர் அருட்தந்தை பிரான்சீஸ் தேவசகாயம் ஆகியோரும் இணைந்து திருப்பலியினை சிறப்பித்தனர்.
திருப்பலி நிறைவில் முப்பெரும் விழாவின் சிறப்பு நிகழ்வாக மேதகு ஆயர் அவர்கள் பங்குத்தந்தை மற்றும் ஆரம்பகால உறுப்பினர்களுடன் கேக் வெட்டி மகிழ்வினைக் கொண்டாடினார். தொடர்ந்து பொன்விழா நினைவு மலர் வெளியீடு (“புனிதரின் ஞான ஒளியில்”) இடம்பெற்றது. முதல் பிரதியினை மேதகு ஆயர் அவர்களுக்கு பங்குத்தந்தை அவர்கள் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து செங்கலடி பங்கு மகன் சகோ.வி.நி.கிசோக் அவர்களினால் ஜுபிலி நினைவாக மகிமையின் இராகங்கள் வரிசையில் “கல்லறைகள் திறக்கப்படவேண்டும்” என்ற பாடல் இறுவெட்டும் வெளியிட ப்பட்டு மேதகு ஆயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு மறைமாவட்ட எல்லைக்குட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட பொன்விழா பாடல் போட்டியிலும், சித்திரப்போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன. மற்றுமொரு நினைவாக ஆலய மணிக்கோபுரத்திற்கான அடிக்கல் ஆயர் அவர்களால் நடப்பட்டது. மாலை கலைநிகழ்வுகளும், வினோத விளையாட்டுக்களும் இடம்பெற்று முப்பெரும் விழா மேலும் சிறப்பிக்கப்பட்டது..

48வது உலகத் தொடர்பு தின விழாவும்,
கலைஞர்கள் கௌரவிப்பும்
மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 48வது உலகத் தொடர்பு தின விழா 09.08.2014 அன்று சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. சமூகத் தொடர்பு நிலைய இயக்குனர் அருட்தந்தை.லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருள் தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் தமதுரையில் டிஜிட்டல், உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது எனவும் தொடர்பு சாதனங்களால் நன்மை, தீமை இரண்டும் உள்ளது. பண்பாட்டு சீரழிவு, திருமண முறிவுகள், குடும்ப உறவு பாதிப்பு போன்றவைகள் முக்கியமானதாகவுள்ளது. ஆகவே, இதனை மனதில் இருத்தி உண்மையான தொடர்பாடல் எம்மை நெருங்கி உறவு, ஓப்புரவு ஏற்பட வழிவகுக்க வேண்டும், உறவை வளர்க்க ஊடகங்கள் உதவவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வட-கிழக்கு மாகாண முன்னாள் கலை, கலாச்சார பணிப்பாளர் திரு.கே. எதிர்மன்னசிங்கம், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை.ஜே.எஸ்.மொறாயஸ், கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை. ஜி.அம்புறோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வருடத்திற்கான உலகத்தொடர்பு விழா சிறப்புரையினை கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக ஆளுனர் குழு உறுப்பினர் பேராசிரியர் திரு.எஸ்.மௌனகுரு அவர்கள் “டிஜிடல் உலகை நமதாக்குவோம்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.
பாரம்பரிய நடனமாக கலைக்கோட்டன் இருதயநாதன் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட “ஏழு கன்னியர்’’ என்ற நாட்டுக்கூத்தினை மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் வழங்கினர்.
இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக இவ்வருடத்தின் கலைஞர் கௌரவிப்பு இடம்பெற்றது. நாடகம், கலை, இலக்கியப் பணிக்காக இயேசு சபை துறவி அருட்தந்தை. ஜோசப்மேரி அவர்களும், கல்வி, கலை, இலக்கியப்பணிக்காக திரு.ஆர்.பெஸ்லியோ வாஸ் அவர்களும் மேதகு ஆயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி, பொற்கிளி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான அறிமுக உரையினை முறையே திரு.ஆனந்தா ஏஜி இராஜேந்திரன், திரு.அ.ஜெகநாதன் ஆகியோர் வழங்கினர்.
அதேவேளை சமூகத் தொடர்பு நிலையமானது மனித உரிமைகள் ஆண்டினை முன்னிட்டு நடாத்திய குறுந்தி ரைப்படப்போட்டிக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. முதலாம், மூன்றாம் இடங்களை வாகரைப் பிரதேசத்தினைச் சார்ந்தவர்களும், இரண்டாம் இடத்தினை செங்கலடி பிரதேசத்தினைச் சார்ந்தவரும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை: மட்டு. மறைமாவட்ட ஆயர்
Diocese of Batticaloa 10 Aug 2014

தற்போது இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற உலக தொடர்பு தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டில் தற்போது ஊடக சுதந்திரம் இல்லை, ஊடக சுதந்திரம் முக்கியமானாதாகும், அனைவருக்கும் கருத்துக் கூறுகின்ற சுதந்திரம் உண்டு.
ஆனால் இங்கு ஊடகவியலாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ சுதந்திரமாகச் செயற்பட முடியாதுள்ளது. தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் உலகை ஆக்கிரமித்துள்ளன.
இணையத்தளங்கள் மற்றும் கைத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவைகள் தற்போது செல்வாக்குச் செலுத்துகின்றன. ஊடகங்களினால் நன்மை உள்ளது.
அதேபோன்று தீமையும் ஏற்படுகின்றது, உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அதே நிமிடத்தில் நாங்கள் அறிந்துகொள்கின்றோம்.
உக்ரைன் நாட்டில் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை ஐந்து நிமிடங்களில் அறிந்துகொள்ள முடிகின்றது.
இதேபோன்று அவ்விடத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்கின்றோம்.
மேலும், இன்று தொலைக்காட்சி நாடகங்களினால் பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. பலரின் திருமண வாழ்க்கை சீர்குலைவதற்கு இந்த தொலைக்காட்சி நாடகங்கள் காரணமாக உள்ளன.
அத்தோடு பாடசாலை மாணவர்கள் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதால் மாணவர்களும் இதன் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.
கருத்துச் சுதந்திரமும் ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரமும் ஊடகங்களுக்கான சுதந்திரமும் இருக்க வேண்டும் என்றார்.

Click to set custom HTML
செங்கலடியில் பொன்விழா பாடல் போட்டி
Diocese of Batticaloa 31 July 2014
மட்டக்களப்பிலிருந்து தமிழ்கத்தோலிக்க
செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினராஜா
மட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகத்தின்கீழ் அமைந்துள்ள செங்கலடி, தூய நிக்கொலஸ் தேவாலயம் அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் வகையில் சிறப்பு நிகழ்வாக பொன்விழா பாடல் போட்டியொன்றினை நடாத்தியது. அதன் இறுதிச்சுற்றானது 28.07.2014 அன்று பங்குத்தந்தை. ஜி.மகிமைதாஸ் (சொமஸ்கன் சபை) அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது. இறுதிச்சுற்றில் எட்டு பாடகர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நடைபெற்ற இப்போட்டியில் சிறந்த பாடகராக (சுப்பர் சிங்கர்) திரு.சேகர் ஜோசப் (இருதயபுரம்) அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை முதலாவதாக செல்வி.புவிராஜசிங்கம் சப்திகா (புளியந்தீவு) அவர்களும் இரண்டாவதாக திரு.எரோன் தனுசாந்தன் (புளியந்தீவு) அவர்களும், மூன்றாவதாக திரு.சித்தார்த்தன் பாய்வா (தாண்டவன்வெளி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
ஐந்தாம், ஆறாம் இடங்களை முறையே திருமதி.ஸ்ரெனிக்கா றாகல் (செங்கலடி) திரு.எஸ்.ஜுட்லர் (இருதயபுரம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பணப்பரிசுகள் பொன்விழா நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன.

இரண்டு ஆண்டுகள் நிறைவில் மட்டக்களப்பு மறைமாவட்டம்
Diocese of Batticaloa 14 July 2014
மட்டக்களப்பிலிருந்து தமிழ்கத்தோலிக்க
செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினராஜா
மட்டக்களப்பு மறைமாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு சிறப்பு நன்றித்திருப்பலி பேரருட்தந்தை. ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் 03.07.2014 வியாழன் மாலை தூய மரியாள் பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியில் ஆயர் அவர்களுடன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை.எப்.எக்ஸ்.டயஸ் அடிகளார், மட்டக்களப்பு, கல்முனை மறைக்கோட்ட முதல்வர்கள், மற்றும் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தையர்களும் இணைந்து திருப்பலியினைச் சிறப்பித்தனர். திருப்பலியில் மறைமாவட்டத்தின்கீழ் செயற்படும் துறவறசபைகளின் அருட்சகோதர, சகோதரிகள், பணித்தளங்களிலிருந்து வருகைதந்த இறைமக்கள் அநேகர் கலந்துகொண்டனர்.
திருப்பலி நிறைவில் அருட்தந்தையர்கள், அருட்சகோதர சகோதரிகள், பங்கின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் மேதகு ஆயர் அவர்கள் கேக் வெட்டி மகிழ்வினைக்கொண்டாடினார். ஆயர் அவர்கள் இரண்டு வருடங்கள் தம்முடன் இணைந்து மறைமாவட்டத்தை வழிநடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் இவ்வேளையில் தமது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

2000 வது அமர்வை நிறைவுசெய்த தூய சம்மனசுக்களின் இராக்கினி மாதா பிரசீடியம்
Diocese of Batticaloa 25 June 2014
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினராஜா
தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் 1973ல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்பட்டுவரும் தூய சம்மனசுக்களின் இராக்கினி மாதா பெண்கள் பிரசீடியமானது தமது 2000 மாவது அமர்வினை நிறைவுசெய்தமையை 07.06.2014 அன்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமுகமாக வருகைதந்த மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை. ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் பங்குத்தந்தை அருட்தந்தை.கிளமென்ட் வீ அன்னதாஸ், மட்டக்களப்பு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை.இக்னேஸ் ஜோசப், கல்முனை மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை.ஜி.அம்புறோஸ்; ஆகியோர் பான்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து ஆயர் அவர்களின் தலைமையின்கீழ் சிறப்பு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.
திருப்பலி நிறைவில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின்போது அருட்தந்தை.இக்னேஸ் ஜோசப் மற்றும் ஆயர் அவர்களது ஆசியுரைகள் இடம்பெற்றன. அத்துடன் நீண்ட காலமாக மரியாயின் சேனையில் பணியாற்றி தற்சமயம் ஓய்வுபெற்றுள்ள அங்கத்தவர் திருமதி. இமாக்குலேற்றா மாசலீன் அவர்களும், மேதகு ஆயர் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் சிறப்பம்சமாக நிகழ்வை நினைவு கூரும் வண்ணம் “வைகறை” என்னும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன், நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன. நூல் பற்றிய கருத்துரை தொண்டன் இணை ஆசிரியர் திரு.மலர்வேந்தன் அவர்களால் வழங்கப்பட்டது. இம்மலரின் முதற்பிரதி மேதகு ஆயர் அவர்களுக்கு பங்குத்தந்தை அவர்களால் வழங்கப்பட்டதுடன், ஆயர் அவர்களால் நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோருக்கும் பிரதிகளும், நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன.
இச்சிறப்பு நிகழ்வில் திருக்குடும்ப, திருச்சிலுவை அருட்சகோதரிகள், மட்டக்களப்பு மறைக்கோட்ட எல்லைக்குள் செயற்படும் அனைத்து மரியாயின் சேனைகளின் தலைவர், செயலாளர் உட்பட பங்கில் செயற்படும் அப்போஸ்தலிக்க சபைகளின் பிரதிநிதிகள், பங்கு மேய்ப்புப்பணிச்சபை அங்கத்தவர்கள், பங்கு மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- ஜே.எச்.இரத்தினராஜா

தாண்டவன்வெளி, தூய வின்சன்ட் டி போல் சபையின் புதிய நிர்வாகம்
Diocese of Batticaloa 13 March 2014
தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் செயற்படும் தூய வின்சன்ட் டி போல் சபையின் வருடாந்த பொது அமர்வானது 08.03.2014 அன்று சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்குத்தந்தையும், ஞான ஆலோசகருமான அருட்தந்தை.சீ.வி.அன்னதாஸ் அடிகளாரும், பிராந்திய தூய வின்சன்ட் டி போல் சபையின் வட பகுதிக்கான உப தலைவர் திரு.மை.ரூபகீர்த்தி அவர்களும் கலந்து கொண்டனர். இவ்வமர்வில் வருடாந்த செயலறிக்கை, கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து 2014-2016 ஆண்டு காலப்பகுதிக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. நிர்வாகத்தெரிவின்போது பின்வருவோர் புதிய நிர்வாக உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் - திரு.வை.பிரான்சீஸ்
உப தலைவர் - திரு.ஈ.சி.கபிரியல்
செயலாளர் - எஸ்.ஜெயகுமார்
உப செயலாளர் - திரு.எம்.சில்வெஸ்டர்
பொருளாளர் - திரு.ஜே.எச்.இரத்தினராஜா
தலைவர் - திரு.வை.பிரான்சீஸ்
உப தலைவர் - திரு.ஈ.சி.கபிரியல்
செயலாளர் - எஸ்.ஜெயகுமார்
உப செயலாளர் - திரு.எம்.சில்வெஸ்டர்
பொருளாளர் - திரு.ஜே.எச்.இரத்தினராஜா
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற அரச தேசிய நத்தார் விழா கொண்டாட்டம்
Vatican 30 Dec 2013
மட்டக்களப்பிலிருந்துகத்தோலிக்க செய்திலங்கா
இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
15.12.2013 மாலை 02 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற அரச நத்தார் விழா கொண்டாட்டத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்களுடன் ,ஒன்றிப்பு கிறிஸ்தவ சபைகளின் அருட் பணியாளர்களும்,பெளத்த சாசன அமைச்சின் பிரதி அமைச்சர் எஸ்.குணசேகர அவர்களும்,கிறிஸ்தவ அமைச்சின் செயலரும்,அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த பெருமளவிலான கிறிஸ்தவர்களும் ,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
வரவேற்ப்பு நடனத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வும் ,அதனை தொடர்ந்து அருட்பணி கிரைட்டன் அவுஸ்கோன் அடிகளாரின் வார்த்தை வழிபாடும் செப ஆராதனையும் நடைபெற ,நிகழ்வுகள் ஆரம்பமாகியது.பல்வேறு ஒன்றிப்பு சபைகளால் நத்தார் கீதங்கள்,நடனம்,நாடகம் என மேடை எல்லோரையும் தன் பால் ஈர்த்தது.
ஆயர் ஜோசெப் பொன்னையா அவர்கள் மும்மொழியிலும் உரையாற்றினார் .நிறைவில் நன்றியுரை செப ஆராதனையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது."இயேசு பிறப்பின் மகிழ்வை அகில சமூகத்தின் பிறப்பாக்குவோம் எனும் கருப்பொருளில் இவ்வரச நத்தார் விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். "

மார்கழி 8,அன்னை மரியாளின் அமல உற்பவ பெருவிழா பேராலயத்தில்
சிறப்புத் திருப்பலி
Diocese of Batticaloa 06 Dec 2013
மட்டக்களப்பிலிருந்துகத்தோலிக்க செய்திலங்கா
இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
சிறப்புத் திருப்பலி
Diocese of Batticaloa 06 Dec 2013
மட்டக்களப்பிலிருந்துகத்தோலிக்க செய்திலங்கா
இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
08.12.2013 ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இன்று காலை 07 மணிக்கு விஷேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு,சிறார்களுக்கு ஆயர் திவ்விய நற்கருணை ,உறுதி பூசுதல் ,அருட்சாதனங்களை வழங்கி வைத்தார். பங்குதந்தை ஜே.எஸ்.மொறாயஸ் ,துணை பங்குதந்தை சேவியர் ரவிகாந்த் ,அருட்சகோதர,சகோதரிகள்,பங்குமக்கள் என பலர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
அமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception)
அமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மை யைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கை யிடுகிறது.
பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் "சென்மப் பாவம்" என்று அறியப்பட்டது.மரியாவின் அமலோற்பவ விழா ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
மறையுண்மை
இயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறித்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மை யை அனைத்துலகுக்கும் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்த வர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார்.
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் இயேசுவின் அன்னையாகிய மரியா பற்றிக் கீழ்வரும் மறையுண்மையை வழுவாவரத்தோடு, அதிகாரப் பூர்வ மாக அறிவித்தார்
“புனித கன்னி மரியா, தாம் கருவில் உருவான முதல் நொடியிலிருந்தே, வல்லமைமிக்க கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனுக்குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டு, பிறப்புநிலைப் பாவக் கறை அனைத்தினின்றும் பாதுகாக்கப்பட்டார்.”இந்த மறையுண்மை மரியாவின் கன்னிமை (virginity of Mary) மற்றும் இயேசுவின் கன்னிப்பிறப்பு (virgin birth of Jesus) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுவிழா
Diocese of Batticaloa 06 Dec 2013
மட்டக்களப்பிலிருந்துகத்தோலிக்க செய்திலங்கா இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவானது உலகெங்கிலுமுள்ள தமிழ் நெஞ்சங்களினால் முன்னெடுக்கபட்டு வருவதை எமது இணைய பயனாளிகள் அறிந்திருப்பீர்கள்.யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ,கல்முனை, கொழும்பு என அடிகளாரின் நூற்றாண்டு ஏற்பாட்டு குழுவினர் மிகவும் சிறப்பாக இந்நூற்றாண்டு விழாவை முன்னெடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுவிழா அதிபர் ஸ்டீபன் மத்தியூ அவர்களின் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் (04.12.2013)நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ் அவர்களும்,இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க தலைவர் வி.ரி .சகாதேவராஜா ,கல்முனை வலைய தமிழ் பாட உதவிகல்வி பணிப்பாளர் கே.வரதராஜன், பாவாணர் அக்கரைப்பாக்கி யன்,ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

தேசிய தூய வின்சன்ட் டி போல்சபையின்
வருடாந்த பொது அமர்வு
Diocese of Batticaloa 04 Dec 2013
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா
இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினராஜா
தேசிய தூய வின்சன்ட் டி போல் சபையின் வருடாந்த பொது அமர்வானது 30.11.2013 அன்று கொழும்பு, 6ம் சின்னப்பர் நடுநிலையத்தில் தேசிய தலைவி திருமதி.லியோனி பெர்னாண்டோ அவர்களது தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் தேசிய பொது நிலையினர் ஆணைக்குழு இயக்குனர் மேதகு ஆயர் கலாநிதி நோபட் அன்ராடி அவர்களது தலைமையில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. இத்திருப்பலியிலும், தொடர்ந்து இடம்பெற்ற பொது அமர்விலும் மட்டக்களப்பு திருகோணமலை, யாழ்ப்பாணம் மன்னார் கண்டி சிலாபம் கொழும்பு பிராந்திய மாவட்ட சபைகளின் ஆன்மீக இயக்குனர்களும் கலந்துகொண்டனர். இவ்வமர்வில் வருடாந்த செயலறிக்கை, கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இலங்கையின் பல பாகங்களிலும் செயற்படும் தூய வின்சன்ட் டி போல் ஆலோசனைச்சபைகள் பிராந்திய சபைகள் மாவட்ட சபைகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சுமார் 150 க்கும் அதிகமானோர் இப் பொதுஅமர்வில் கலந்துகொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க
அமிர்தகழி தூய கப்பலேந்திய
அன்னை ஆலய 205ஆவது பெருவிழா
Diocese of Batticaloa 28 Nov 2013
மட்டக்களப்பிலிருந்துகத்தோலிக்க செய்திலங்கா
இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 205வது வருடாந்தப் பெருவிழா 20.09.2013வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது .
திருவிழா நவநாள் காலங்களில் தினமும் மாலை 05.30மணிக்கு திருச்செபமாலை பிராத்தனையும் ,திருப்பலியும், மறையுரையும் இடம்பெற்றது
.28.09.2013 சனிக்கிழமை மாலை 05.00மணிக்கு திருப்புகழ் மாலை வழிபாடுகள் ,அதனை தொடர்ந்து அருட்பணி எ .தேவதாசன் அவர்களின் மறையுரையும் ,நற்கருணை வழிபாடுகளும் இடம்பெற்றது .அதனை தொடர்ந்து அன்னையின் திருவுருவம் பவனியாக வழமையான வீதிகளின் ஊடக எடுத்துச்செல்லப்பட்டது .
29.09.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 07.15மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையுடன் ,பங்கு தந்தை அருட்பணி ஜூலியன் மற்றும் மட்டக்களப்பு மறைகோட்ட முதல்வர் அருட்பணி ஜே .எஸ் ,மொறாயஸ் ,சின்ன குரு மட தந்தை அருட்பணி எ ,தேவதாசன் இவர்களுடன் இணைந்து திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது . இத் திருப்பலியுடன் சிறார்களுக்கு திவ்விய நற்கருணை ,உறுதிப்பூசுதல் ஆகிய அருட்சாதனம் ஆயரினால் வழங்கப்பட்டது .
பெருவிழா நிறைவிலே கொடியிறக்கப்பட்டு ,அலங்கரிக்க ப்பட்ட கப்பலிலே அன்னையின் திருவுருவம் மட்டக்களப்பு வாவியினூடாகப் பவனியாக கொண்டு செல்லப்பட்டது திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூபம் வாவியில் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது கண் கொள்ளாக்காட்சியாக பக்தி நிறைந்த நிகழவாக அனைவரை யும் ஈர்த்தது. இப்பவனியானது ஆலய முன் வாவியில் ஆரம்பமாகி கல்லடி பாலம் ஊடாக மட்டுநகர் பிரதான வாயில் (BATTI GATE) வரை சென்று திரும்பியது.
அதனை தொடர்ந்து வழமைபோன்று மீனவ சங்க குழுவினரால் அன்னதானம் பகிர்ந்தளிக்கப்பட்டு பெருவிழா இனிதாக நிறைவு பெற்றது .இப் பெருவிழா திருப்பலியில் அருட்சகோதர ,சகோதரிகளும் ஆயிரக்கணக்கான அன்னையின் பக்தர்களும் பக்தியுடன் கலந்துகொண் டனர்.பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்களும்,அவர்களின் குடும்பத்தாரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்

“2014 - மனித உரிமைகள் ஆண்டாக
பிரகடனம்”மறைமாவட்ட மேய்ப்புப்பணிச்பை
மகாநாட்டில் - ஆயர் அறிவிப்பு
Diocese of Batticaloa 18 Nov. 2013
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். இரத்தினராஜா
மட்டக்களப்பு மறைமாவட்ட மேய்ப்புப்பணிச் சபையின் இரண்டாவது வருடாந்த பொது அமர்வும் மகாநாடும் 16.11.2013 காலை தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் மறைமாவட்ட ஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட கொடி எற்றலுடனும், மங்கள விளக்கே ற்றும் நிகழ்வுடனும் ஆரம்பமானது.
பொது நிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை. எஸ்.டக்ளஸ் ஜேம்ஸ் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைமையுரையாற்றிய மேதகு ஆயர் அவர்கள் இவ்வருடம் எமது மறைமாவட்டம், மறைக்கோட்டம், பணித்தளங்கள், பக்திச்சபைகள் ஆகியன நம்பிக்கை ஆண்டினை முன்னிட்டு பல நிகழ்வு களையும், செயற்திட்டங்களையும் முன்னெடுத்து சிறப்பான முறையில் செயற்பட்டதெனவும், இதற்காக அனைத்து தரப்பினருக்கும் தமது மனமார்ந்த பாராட்டி னையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து சமகால பத்திரிகைகள், தொடர்புச் சாதனங்களில் கூடுதலான வகையில் மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள், பெண்கள் வன்முறை, சிறுவர்கள் துபிரயோகம் போன்றவாறான செய்திகள் பற்றியே பேசப்படுகின்றன. இதனைக்கவனத்திலெடுத்து எமது திருச்சபையும் முக்கியத்துவம் கொடுத்து மனித உரிமைகள்பற்றி அனைவரும் அறிந்தசெயற்படுவதற் கேற்ப எதிர்வரும் 2014ம் ஆண்டினை மனித உரிமைகள் ஆண்டாக பிரகடப்படுத்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு கருப்பொருளாக ;மனித உரிமையும்,
திருச்சபையின் வழிகாட்டலும்” என்னும் தலைப்பில் இலங்கை, கரித்தாஸ் திட்டமிடல் முகாமையாளர் திரு.கே.தெய்வேந்திரராஜா அவர்களால் சிறப்புரையா ற்றப்பட்டு குழு கலந்துரையாடலும் இடம்பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற மறைமாவட்ட மேய்ப்புப்பணிச்சபை வருடாந்த பொது அமர்வில் புதிய மறைமாவட்ட, மறைக்கோட்ட, பணித்தள மேய்ப்புப்பணி ச்சபைகளின் அமைப்பு விதிகள்; அங்கீகரிக் கப்பட்டதுடன், 2014-2015ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது. செயலாளராக திரு.ஜி.ஜே.சாந்தகுமார் அவர்களும், உப செயலாளராக திரு.கே.அருளானந்தம் அவர்களும் பொருளாளராக திரு.ஏ.றொபட் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வமர்வில் உறுப்புரிமைபெற்ற அனைத்து அருட்தந் தையர்கள், அருட்சகோதர சகோதரிகள், பக்திச்சபைகளின் பிரதிநிதிகள், பொது நிலையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தராதது பெரும் கவலையளிக்கின்றது - மட்டு ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை
Diocese of Batticaloa 17 Nov.2013
மட்டக்களப்பிலிருந்துகத்தோலிக்க செய்திலங்கா
இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தராதது பெரும்
கவலையளிக்கின்றது என மட்டு ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை தனது கவலையை வெளியிட்டுள்ளார். 15.11.2013 ஆயர் இல்லத்தில் சிவில் சமூக அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆயர் இக்கருத்தை தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான
வினா விடைப்போட்டி - 2013
Diocese of Batticalaoa 11 Nov.2013
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக
ஜே.எச். இரத்தினராஜா
மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சன்ட் டி போல சபையானது வருடா வருடம் பாடசாலை மாணவர்களுக்கிடையே தூய வின்சன்ட் டி போல் சபை பற்றியும், சபையின் ஸ்தாபகர் பாதுகாவலர் ஆகியோர் பற்றி மாணவர்கள் அறிந்துகொள் ளும்வண்ணம் வினா விடைப்போட்டியினை நடாத்திவரு கின்றது.
இவ்வகையில் இவ்வருடத்திற்கான போட்டியானது 10.11.2013 அன்று தாண்டவன்வெளி பேர்டினன்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது. இப்போட்டியில் ஆண்டு 9-11 பிரிவில் எட்டு பாடசாலைகளும் ஆண்டு 12-13 பிரிவில் ஆறு பாடசாலை களும் பங்குபற்றின.
இம்முறை போட்டியானது முதன்முதலாக நவீன தொழில் நுட்பத்துடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். நடைபெ ற்ற போட்டிகளில் ஆண்டு 9-11 பிரிவில் மட்.மகாஜனா கல்லூரி முதலாமிடத்தையும் மட்.கருவேப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும் பெற்றது. ஆண்டு 12-13 பிரிவில் முதலாமிடத்தை மட்.புனித சிசிலியா மகளிர் வித்தியாலயமும், இரண்டாமிடத்தை மட்.புனித மிக்கேல் தேசிய கல்லூரியும் பெற்றுள்ளது. இப்போட்டி நிகழ்வின்போது பிராந்திய தூய வின்சன்ட் டி போல் சபையின் ஆன்மீக இயக்குனர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். போட்டியினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள்; சபையின் அங்கத்தவர்கள் அநேகர் சமுகமளித்திருந்தனர்.
மட்டக்களப்பு தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு ஜனன விழா
Diocese of Batticaloa 09 Nov.2013
மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்க செய்திலங்கா இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
செய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச்செல்ல அழுத்தவும்
Click to get back to home page
மட் /தேற்றாத்தீவு தூய யூதா ததேயு
திருத்தல வருடாந்த பெருவிழா -2013
மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்க செய்திலங்கா இணைய தளத்திற்காக
வ.அன்டனி சுரேஸ் கண்ணா
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விழங்கும் கத்தோலிக்க திருத்தலங்களிலமட் /தேற்றாத்தீவு தூய யூதா ததேயு திருத்தலம் மிகவும் பெயர்பெற்ற தும்,புதுமைகளால் அருள்பாலிக்கும் சிறந்த திருத்தலமா கும்.எண்ணில்லா பக்தர்களை கொண்டு விளங்கும் இத்திருத்தலத்தின் இவ்வாண்டுக்கான பெருவிழா 27.10.2013 காலை அருட்பணி கிளமென்ட் அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது.
பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளார்,அருட்பணி சாந்தன் இம்மானுவேல் அடிகள் பெருவிழா பலியில் இணைய அருட்சகோதர ,சகோதரிகளுடன், புனித தூய யூதா ததேயுவின் பக்தர்கள் பக்தியுடன்ப்பலியில் கலந்துகொண்டார்கள். திருப்பலி நிறைவில் புனிதரின் திருச் சொரூப பவனி நடைபெற்று அனைவருக்கும் ஆசீர் வழங்கி கொடியிறக்கி திருவிழா நிறைவடைந்தது.
செய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச்செல்ல அழுத்தவும்
Click to get back to home page
மட்டு மறைமாவட்ட நான்கு
அருட்சகோதரர்கள்
தியாக்கோன்களாக திருப்பொழிவு
Diocese of Batticaloa 31 Oct 2013
மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்க செய்திலங்காஇணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
மட்டு மறைமாவட்டம் விரைவில்(மார்கழி ) நான்கு புதிய
குருக்களை இறை பணிக்காக பெற்றுக்கொள்ளும் மகிழ் வின் நாளை எதிர் பார்த்து அவர்களுக்காக விஷேட செபங்களில் மறைமாவட்டம் முழுவதுமே பிராத்தனை யில் ஈடுபட்டுள்ளது.
அருட்சகோதரர் பத்திநாதன் சுகந்தன் -பெரியகல்லாறு
அருட்சகோதரர் ராஜசிங்கம் பயஸ் பிரசன்னா - வீச்சுக் கல்முனை
அருட்சகோதரர் மெருசன் ஹென்றிக் -அக்கரைப்பற்று
அருட்சகோதரர் நோட்டன் ஜோன்சன் - பனிச்சையடி (டச்பார் )
ஆகிய நான்கு அருட்சகோதரர்களும் 19.10.2013 கண்டி தேசிய குருமடத்தில் நடைபெற்ற திருப்பொழிவு சடங்கில் இலங்கையின் ஏனைய மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள் மொத்தம் 38 பேருமாக காலி மறைமாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க ஆண்டகையால் தியாக்கோன்களாக திருப்பொழிவு செய்யப்பட்டனர்.
இத் திருப்பொழிவு சடங்கில் தேசிய குருமட அதிபர் அருட்பணி எல்மோ டயஸ் அடிகளாருடன் மறைமாவட்ட குருக்கள் அருட்சகோதரசகோதரிகள் பெற்றோர்உறவினர் நண்பர்கள் என பலர் கலந்துகொண்டு இத்திருப்பலியில் இவர்களுக்காக விஷேட பிரார்த்தனையில் ஈடுபட்டு நிறைவில் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்
நாமும் வாழ்த்துகின்றோம்.

மட்டக்களப்பு மறைக்கோட்ட மேய்ப்புப்பணிச்சபையின் புதியநிர்வாகம்
Diocese of Batticaloa 27 Oct 2013
Diocese of Batticaloa 27 Oct 2013
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக
ஜே.எச். இரத்தினராஜா
மட்டக்களப்பு மறைக்கோட்ட மேய்ப்புப்பணிச்சபையின் புதிய நிர்வாகம் மட்டக்களப்பு மறைக்கோட்ட மேய்ப்புப்பணிச்சபையின் வருடாந்த பொது அமர்வானது வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் தேவாலயத்தில் தலைவரும் மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந் தை ஜே.எஸ். மொறாயஸ் அடிகளாரின் தலைமையில் 26.10.2013 அன்று இடம்பெற்றது.
இவ்வமர்வில் மட்டக்களப்பு மறைக்கோட்ட எல்லைக்குள் அமைந்துள்ள பணித்தளங்களின் அருட்தந்தையர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், அமைப்பு ரீதியாக அங்கத்துவம் பெறும் பிராந்திய பக்திச்சபைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தூய அன்னம்மாள் தேவாலய பங்குத் தந்தை. ஜே.ஏ.ஜி.ரெட்ணகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைவர் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து பணித்தளம் ரீதியாகவும், பிராந்திய பக்திச்சபைகளின் ரீதியாகவும் நம்பிக்கை ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் தொடர்பாகவும் வருகைதந்த பிரதிநிதிகளால் அறிக்கையிடப்பட்டன.அடுத்து, இரு வருட காலப்பகுதிக்கான புதிய நிர்வாகத்தெரிவு இடம் பெற்றது. தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் விபரம்
செயலாளர் - திரு.ஜி.ஜோய் பிரகாஸ்,
உப செயலாளர் : திரு.ஜி.ஜே.சாந்தகுமார்
பொருளாளர் : திரு.எஸ்.கணேஸ்குமார்

தமிழ்கத்தோலிக்க செய்திலங்கா இணையத்தள மட்டக்களப்புசெய்தியளருடன்
இணையத்தள இயக்குனர்
அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை சந்திப்பு
Diocese of Jaffna 24 Oct 2013
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக
ஜே.எச். இரத்தினராஜா
தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தள மட்டக்களப்பு செய்தியாளர் வ.அன்டனி சுரேஸ் கண்ணா (Left) மற்றும் ஜே.எச். இரத்தினராஜா ஆகியோருடன்ருடன் இயக்குனர் அருட்தந்தை.ரூபன் மரியாம்பிள்ளை
செய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச்செல்ல அழுத்தவும்
Click to get back to home page
தேசிய இளைஞர் பேரணி -2013
Archdiocese of Colombo 23 Oct 2013
மட்டக்களப்பிலிருந்து தமிழ்கத்தோலிக்கசெய்தி லங்கா இணைய தளத்திற்காக வ.அன்டனி சுரேஸ் கண்ணா
ஐப்பசி 19, தேசிய இளைஞர் பேரணியானது றாகம இலங்கை மாதா திருத்தலத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் அனைத்து மறை மாவட்டங்களிலிருந்தும் அதிகமான கத்தோலிக்க இளைஞர் யுவதி கள் பங்குபற்றியிருந்தனர்.
இப்பேரணியின் முக்கிய கருத்தாக “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங் கள்” என்ற இறைவார்த்தை மையப்பொருளாய் காணப்பட்டது.
ஐப்பசி 19 காலை திருத்தலத்தில் அனைத்து மறைமாவட்டங்களிலுமிருந்து வருகைதந்த இளைஞர்களுக்குமான ஜெப வழிபாடு இடம்பெற்றது. இவ்வழிபாடு முடிவடைந்த பின் இப்பேரணியானது கல்வாரித் திருத்தலத்திலிருந்து ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது. அங்கு சென்றடைந்ததும் அனைத்து மறைமாவட்டத்தின் ஆயர்களும் இணைந்து அதிவந்த னைக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொ டுக்கப்பட்டது. அத்திருப்பலியுடம் இப்பேரணியானது முடிவுற்றது
இப்பேரணியின் முக்கிய கருத்தாக “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங் கள்” என்ற இறைவார்த்தை மையப்பொருளாய் காணப்பட்டது.
ஐப்பசி 19 காலை திருத்தலத்தில் அனைத்து மறைமாவட்டங்களிலுமிருந்து வருகைதந்த இளைஞர்களுக்குமான ஜெப வழிபாடு இடம்பெற்றது. இவ்வழிபாடு முடிவடைந்த பின் இப்பேரணியானது கல்வாரித் திருத்தலத்திலிருந்து ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது. அங்கு சென்றடைந்ததும் அனைத்து மறைமாவட்டத்தின் ஆயர்களும் இணைந்து அதிவந்த னைக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொ டுக்கப்பட்டது. அத்திருப்பலியுடம் இப்பேரணியானது முடிவுற்றது
செய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச்செல்ல அழுத்தவும்
Click to get back to home page
“தமிழியல் விருது” பெற்ற தமிழ் கத்தோலிக்க
செய்தி லங்கா இணையத்தள இயக்குனர்
Diocese of Jaffna 22 Oct 2013
மட்டக்களப்பிலிருந்து தமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக
ஜே.எச். இரத்தினராஜா
யாழ்ப்பாணம், பிசப் சவுந்தரம் மீடியா நிலையத்திலிருந்து செயற்படும் தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம், மற்றும் தமிழ் கத்தோ லிக்க செய்தி லங்கா (ரிசிஎன்எல்) தொலைக்காட்சி இயக்குனரும், தமிழ்நாடு கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக இணைப்பாளருமான அருட்தந்தை.ரூபன் மரியாம்பிள்ளை அவர்களுக்கு எழுத்தாளர் ஊக்குவி ப்பு மையம் அவரது கட்டுரை நூலான “ஆசிரிய தலையங்கம் ஓர் அறிமு கம்” நூலுக்கு 2012 ம் ஆண்டுக்கான ‘செந்தமிழ்ச்செல்வர் ஸ்ரீகந்த ராஜா தமிழியல் விருதினை’ வழங்கி கௌரவித்தது.
இந்கிகழ்வானது மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் 20.10.2013
அன்று கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரை யாளர் திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சீஸ் தலைமையில் இடம் பெற்றது. ஆசிரியரின் முதலாவது வெளியீடான “பத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்” நூலானது வட கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும், இலங்கை இலக்கியப்பேரவை விருதியினையும் பெற்றுள்ளமை குறிப்பி டத்தக்கது. இதுவரை ஊடகவியல் சார்ந்த பத்து நூல்கள் அருட்தந்தையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ளது.
இந்கிகழ்வானது மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் 20.10.2013
அன்று கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரை யாளர் திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சீஸ் தலைமையில் இடம் பெற்றது. ஆசிரியரின் முதலாவது வெளியீடான “பத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்” நூலானது வட கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும், இலங்கை இலக்கியப்பேரவை விருதியினையும் பெற்றுள்ளமை குறிப்பி டத்தக்கது. இதுவரை ஊடகவியல் சார்ந்த பத்து நூல்கள் அருட்தந்தையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ளது.
செய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச்செல்ல அழுத்தவும்
Click to get back to home page
குருநாகலில் இடம்பெற்ற
மாபெரும் தேசிய செபமாலைப் பேரணி
Diocese of Batticaloa 18 Oct 2013
மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக
ஜே.எச். இரத்தினராஜா
LikeLike
Sign Up to see what your friends like.
செபமாலை மாதமாகிய இம்மாதத்;தில் மரியாயின்சேனையின் இலங் கை செனத்தூஸின் எற்பாட்டில் தேசிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட செபமாலைப் பேரணியானது 16.10.2013 புதன்கிழமையன்று குருநாகல், தூய அன்னம்மாள் தேவாலயத்திருந்து காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி குருநாகல் மாளிகாபிட்டிய மைதானந்தை நோக்கி இடம்பெ ற்றது. இத் திருப்பவனியில் இலங்கையின் மறைமாவட் டங்களைச் சேர்ந்த ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள், மரியாயின் சேனை அங்கத்தவர்கள், பொது நிலையினர் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இத்திருப்பவனியின் போது மறைமாவட்ட ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட பான்ட் வாத்திய இசைகளுடனும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்;களில் செபமாலையை நினைவுபடுத்தும் அன்னையின் திருவுருவப்படம் தாங் கிய பதாதைகளுடனும், திருச்சபையின் கொடிகளுடனும், மரியாயின் சேனையினர் தமது கொடிகளுடனும், ஏனைய இறைமக்கள், அருட்தந்தை யர்கள், அருட் சகோதர சகோதரிகள் அனைவரும் அன்னையின் கொடிக ளுடனும் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
நம்பிக்கை ஆண்டில் தூய அன்னைக்கும், திருச்செபமாலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைபெற்ற இந்நிகழ்வில் இன, மொழி வேறு பாடின்றி சுமார் ஒன்பதாயிரத்து க்கும் அதிகமானோர் கலந்து கொண் டனர்.
இத்திருப்பவனியானது மைதானத்தை அடைந்ததும் குருநாகல் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஹரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகை அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேராயர் அதிவந். மல்கம் கருதினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் தலைமையின்கீழ் ஏனைய ஆயர்கள், அருட்தந்தையர்களுடன் திருப்பலி ஆரம்பமானது. பேராயர் சகோதர மொழியிலும், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந். ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் தமிழிலும் மறையுரை யாற்றினர். ஆயர்களின் மறையுரையின்போது அன்னையின் பெருமை பற்றியும், செபமாலைப் பக்தியின் மகிமை பற்றியும் எடுத்துரைத்தனர். தற்சமயம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை யளிப்பதனால் செபமாலை செபிப்பது குடும்பங்களில் குறைந்துவருவதா கவும் குறிப்பிட்டனர். வழங்கப்பட்ட உரையானது பிற சபைகள் மரியன்னைக்கு எதிராக கூறப்படும் கருத்துக்களுக்கு பதில் கொடுப்பதா கவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
"கத்தோலிக்க ஆசிரியர் தினம்" தூய மரியாள் பேராலயத்தில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிப்பு
Diocese of Battocalo 17 Oct 2013
மட்டக்களப்பிலிருந்து தமிழ்கத்தோலிக்கசெய்தி லங்கா இணைய தளத்திற்காக